நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப்பகுதியிலுள்ள சோலுகும்பு மாவட்டத்தில், தரையிறங்கும்போது இரு வேறு நிறுவனங்களை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இன்று (நவ.3) காலை நடைபெற்ற இந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பயணி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.