கன்னியாகுமரி அருமனை பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் (28) மற்றும் தினேஷ் (27) ஆகிய இரு பொறியியல் பட்டதாரிகள், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று தங்களை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சிங்கப்பூரில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.6.5 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.