நேருக்கு நேர் மோதிய பைக்குகள்.. 2 பேர் பலி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேமக்கோட்டை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு பைக்கில் சென்ற உதயகுமார் உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த மகன் மற்றும் மகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரண் என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕