பைக்குகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. இருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே அதிவேகமாக சென்ற இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பைக்கில் 4 பேரும், மற்றொரு பைக்கில் 2 பேரும் பயணம் செய்த நிலையில் விபத்து காரணமாக தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி