கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் ஈஷா செந்தில் ஆகியோரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். சம்பவம் அறிந்த சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நலம் விசாரித்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரிக்கை விடுத்தார்