ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சர்வதேச எய்க்மா 2026 (EICMA) வாகனக் கண்காட்சியில், டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய ‘டிவிஎஸ் ஆர்டிஆர் 125 எல்சி’ பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஐரோப்பாவில் ஏ1 உரிமம் வைத்துள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டு நவீன அம்சங்களுடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 புதிய எலக்ட்ரிக் பைக்குகளையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, வாகனப் பிரியர்களை இணையத்தில் பெரிதும் கவர்ந்துள்ளது.