TVK இணைகிறார் பு.அ.தி.மு.க. நிறுவனர் புகழேந்தி

தவெகவில் இணையப்போவதாக பு.அ.தி.மு.க. நிறுவனர் மற்றும் தலைவர் புகழேந்தி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் ஆட்சியமைந்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கிய புகழேந்தி தற்போது தவெகவில் இணைய தயாராகி வருகிறார். முன்னதாக அதிமுகவில் இருந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி