நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட மொத்தம் 36 இஸ்ரேலிய அரசு அதிகாரிகளுக்கு எதிராக துருக்கி அரசு கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்படும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இவர்களே முழு பொறுப்பு என்று துருக்கி அரசு கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கி அரசின் இந்த கடுமையான நடவடிக்கை, இஸ்ரேலுக்கும், துருக்கிக்கும் இடையிலான தூதரக உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி