ஆண்டிபட்டி தொகுதிக்கு டிடிவி வலை.. சசிகலாவால் அமமுகவினர் கலக்கம்

தேனி மாவட்டம் அதிமுகவின் வலுவான ஆதரவு தளமாக இருந்து வருகிறது. அங்கு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு செல்வாக்கு அதிகம். இந்த மண்ணில் தான் சசிகலா ஆதரவுடன் டிடிவி தினகரன் கடந்த 1999ல் எம்பி ஆனார். இந்நிலையில், இந்த தேர்தலில் ஆண்டிபட்டியை குறிவைத்து அமமுக அரசியல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், சசிகலா, தேனி மாவட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் அழைத்து பேசி வருவதால், அமமுகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி