திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், “விஜய் ஜெயிக்கும் முன்பே அவரை நம்புவது முட்டாள்தனம். விஜய் முதலில் வென்று அவரை நிரூபிக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார்.