அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் பயணமாக சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் சீன தொழிலதிபர்கள் இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீன பயணத்தை நிறைவு செய்த டிரம்ப் இன்று அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் சென்றடைந்தார். சீன அதிபருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக டிரம்ப் கூறினார்.