வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அண்மையில் கைது செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு வருவது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், கிரீன்லாந்தின் கனிம வளங்களை கைப்பற்றவும் இந்த நடவடிக்கை அவசியமானது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுதந்திர நாடான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முடியாது என்று அந்நாட்டு அரசு டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.