அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், செனட், பிரதிநிதிகள் சபைக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, செனட் சபையில் ஜனநாயகக் கட்சி 45 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 64 இடங்களையும் கைப்பற்றி வலுவாக உள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. டிரம்பின் பொருளாதார கொள்கைகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி: News18