தனது 'TRUTH SOCIAL' சமூக வலைதளத்தில் வெளியிடும் பதிவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள 'TRUTH API' என்ற பெயரில் மாதம் ரூ.1 கோடி கட்டணத்திலான புதிய சேவையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்ப் தனது அறிவிப்புகளை இதில் வெளியிடுவதால், இப்பதிவுகளை முதன்முதலில் பார்க்கும் பெரும் செல்வந்தர்கள் பங்கு சந்தையில் முறைகேடாக பயனடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த செயல் சட்டவிரோதமானது மற்றும் சந்தை தர்மத்திற்கு எதிரானது என கூறி அமெரிக்க ஊடக நிறுவனங்கள் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.