அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நீடித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடரும் வேளையில், ஈரானுடனான இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறைவடைந்தவுடன் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி, எரிபொருள் விலை கட்டுக்குள் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.