நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதாக கூறி CNN, Politico மற்றும் MS Now ஆகிய முன்னணி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ABC, CBS, Fox News மற்றும் NBC ஆகிய பிற செய்தி நிறுவனங்களும் ட்ரம்ப் தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த எதிர்ப்பிற்கு மத்தியில், 'TRUMP TV' என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் புதிய நேரலை ஸ்ட்ரீமிங் சேனலை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது.