அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட மோதல் கடந்த சில மாதங்களாக உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எலான் மஸ்க் தனது X தளத்தில், "கடந்த வாரம் டிரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட டிரம்ப், "எலான் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்" என கூறியுள்ளார்.