பிப்ரவரி 25 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்.. விநியோகம் முடங்கும் அபாயம்

15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டண உயர்வை எதிர்த்து, பிப்.25-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் அவர்கள், அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பால் மற்றும் குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து தொழில் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி