பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து: 6 பயணிகள் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனா விரைவு சாலையில், நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால் லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி