காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த பேருந்து ‘U Turn’ எடுத்ததாக தெரிகிறது. இதனால், அந்த வழியாக வேகமாக சென்ற லாரி அந்த பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.