சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு சிக்கல்!

சேலத்தில் பிப்ரவரி 13-ம் தேதி விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் மனு அளித்துள்ளது. இந்நிலையில், அந்த மனு அரசு வழிகாட்டுதலின்படி தாக்கல் செய்யப்படவில்லை என மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி கூறியுள்ளார். அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப மனு தாக்கல் செய்யப்பட்டால், கேட்ட தேதியிலேயே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி