திரிப்தி டிம்ரி நடிக்கும் 'மா பெஹன்' டிரெய்லர் நாளை வெளியீடு

பாலிவுட் நடிகைகள் திரிப்தி டிம்ரி மற்றும் மாதுரி தீட்சித் இணைந்து நடித்துள்ள 'மா பெஹன்' என்ற டார்க் காமெடி கிரில்லர் திரைப்படம் ஜூன் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சமையலறையில் மர்மமான முறையில் கிடைக்கும் ஒரு சடலத்தை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைக்க ஒரு குடும்பம் முயலும் பரபரப்பான கதை களத்தை கொண்ட இத்திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (மே 22) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி