திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்

மேற்குவங்கத்தின் சோனார்பூரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று (மே 30) தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்பகுதியில் திரண்ட பாஜக தொண்டர்கள் அபிஷேக் பானர்ஜியைச் சூழ்ந்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறே அவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அபிஷேக் தலைக்கவசம் அணிவிக்கப்பட்டு அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி