இலவச பயண அட்டை காலக்கெடு நீட்டிப்பு.. அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயண அட்டைகளின் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயண அட்டைகளின் காலக்கெடு அக்டோபர் 31, 2025ல் இருந்து மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் இலவச பேருந்து பயண அட்டைகளை ஆன்லைனில் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி