பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுக்கவோ பாதியில் இறக்கிவிடவோ கூடாது என்றும், நிறுத்தங்களில் அவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பயணிகள், பெண்கள் மற்றும் முதியோரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் மீது பொதுமக்களின் புகார்கள் உறுதியானால் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.