இந்தியர்களுக்கு TRANSIT FREE VISA வழங்க அனுமதி அளித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெர்மனி விமான நிலையங்கள் வழியாக செல்லும்போது, தனியாக ஜெர்மன் டிரான்சிட் விசா விண்ணப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஜெர்மனி வழியாக செல்லும் இந்தியர்களுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக அமையும். முன்னதாக அண்மையில் ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.