கேரளா உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 2 திருநங்கைகள் போட்டியிட அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்தின் போத்தன்கோடு பிரிவில், அமேயா பிரசாத் என்ற திருநங்கை, பெண்கள் இடஒதுக்கீட்டில் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, அவரது வேட்புமனு செல்லுபடியாகும் என உறுதி செய்யப்பட்டது. அதே போல் மற்றொரு தொகுதியிலும் திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.