சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் திருநங்கை ஈஸ்வரி. முனைவர் பட்டம் பெற்ற இவர் பல இடங்களில் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். ஆனாலும் வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளி ஒன்று அவருக்கு வேலை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், "திருநங்கை என்பதால் வேலை எளிதாக கிடைக்கவில்லை. ஆனால், இந்த பள்ளியில் எனக்கு வேலை வழங்கினார்கள்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி:PT