திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தால், வந்தே பாரத் உட்பட பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால், சென்னை நோக்கி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் ஓட்டுநர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதி கனமழை காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.