விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிப்பு பயிற்சி

திருச்சி: துறையூரில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை குறித்து பயிற்சி அளித்தனர். இயற்கை வேளாண்மை, விதை நேர்த்தி, பஞ்சகவ்யம், மீன் அமிலம் தயாரிப்பு ஆகியன குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மாட்டுச்சாணம், கோமியம், மாட்டுப்பால், நெய், தயிர் உள்ளிட்ட மூலப்பொருள்களை கொண்டு பஞ்சகவ்யம் தயாரித்தனர். பஞ்சகவ்யம் பயன்படுத்தினால் பயிர்களை பூச்சி தாக்குதலிலிருந்து காப்பற்றலாம்.

தொடர்புடைய செய்தி