மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பரோட்டா மற்றும் துரித உணவு தயாரிக்கும் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் ஜூலை 22ல் துவங்குகிறது. 6 நாட்கள் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 100 நாள் வேலை திட்ட அட்டை இருந்தால் நகலுடன் நேரில் வரலாம். 94456 00561ல் அல்லது mdu.rudset@gmail.com, www.rudsettrainning.org-ல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.