ரயில் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல், பயணிகள் அதிர்ச்சி

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் பயணக் கட்டணங்கள் இன்று (டிச., 26) முதல் உயர்கின்றன. பணவீக்கம், பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களில் 215 கிமீ மேல் பயணம் செய்வோருக்கு, குளிர்சாதன, குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகளும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு ஒரு காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய கட்டணம் அமலுக்கு வரும்.

தொடர்புடைய செய்தி