உத்திரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சண்டிகர் - திப்ரூகர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 22க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.