ரயில் தீப்பிடித்து விபத்து: திருவள்ளூரில் மோசமான காற்றின் தரம்

திருவள்ளூர் ஏகாட்டூரில் சரக்கு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பெட்டிகளில் பெட்ரோலிய பொருட்கள் இருந்ததால் 6 மணிநேரம் தொடர்ந்து எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, பெட்ரோலிய பொருட்கள் எரிந்து எழுந்த கரும்புகை காரணமாக திருவள்ளூரில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காற்றில் உள்ள நச்சுக்கள் முற்றிலும் நீங்க 2 நாட்கள் ஆகலாம்.

தொடர்புடைய செய்தி