தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே தேமான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் கடந்த 31ஆம் தேதி வயல் வேலைக்குச் செல்லும்போது நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.