கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளத்தில் நடந்த சாலை விபத்தில் தந்தை, தாய் மற்றும் 3 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாவக்காட்டைச் சேர்ந்த முனீர், அவரது மனைவி பாத்திமா மற்றும் 3 வயது மகன் எமீன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்த கார், முதலில் இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்திலும் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்.

தொடர்புடைய செய்தி

✕
✕