சீனாவில் வசிக்கும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அன்பு பரிமாறிக்கொள்ளும் வகையில் கணவர் தனது மனைவியை பாசமாகத் தழுவியபோது, எதிர்பாராதவிதமாக அந்த தழுவலின் இறுக்கம் அதிகமானதால் மனைவியின் 5 விலா எலும்புகள் முறிந்த சம்பவம் நடந்துள்ளது. கடுமையான வலியால் மனைவி துடித்துப்போய் அலறியடித்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த பிறகே எலும்புகள் முறிந்துள்ளது தெரியவந்தது. எலும்புகள் பலவீனமாகவோ, கால்சியம் குறைபாடோ இருந்தால் இது போல ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.