தெலங்கானாவில் 54 வயது விவசாயி ஒருவர் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டே மட்டன் சாப்பிட்டபோது, இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.