பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினரின், ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 4 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்ட நிலையில், எஞ்சியவர்கள் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.