நீலகிரி மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை விழாவினை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மே 1, 2026 முதல் உதகையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் வர அனுமதி இல்லை. உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சுற்றுலா வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.