குணா குகை, பேரிஜம் ஏரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை சீசன் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். குணா குகை, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால், காலையிலேயே சுற்றுலா பயணிகள் காத்திருந்து நுழைவுச்சீட்டு பெற்று செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி