கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தில், 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், கோடை காலத்தை மிஞ்சும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்து, தேக்கடி ஏரியின் படகு சவாரி பாதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருந்தே நீர்மட்டம் குறைவாக இருப்பதால், படகு சவாரிக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் முழுமையாக ஏற்றப்படாததால், அப்பகுதி களை இழந்து காணப்படுகிறது.