தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தை சித்திரவதை

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்த எழிலரசிக்கு அய்யப்பன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். உடல் முழுவதும் காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி