ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் ஆயுதமேந்திய தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கிய பிரபல மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா இன்று (நவ., 18) காலை சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் எல்லை அருகில் இந்த மோதல் நடந்ததாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹித்மாவுடன் அவரது மனைவி உட்பட மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.