நல்லகண்ணு படித்த ஆரம்பப் பள்ளிக்கு நாளை விடுமுறை

சுதந்திரப்போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு இன்று (பிப்., 25) உடல்நலக்குறைவால் தனது 101வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நல்லகண்ணுவின் சொந்த ஊரான தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில், அவர் ஆரம்பக் கல்வி பயின்ற குமரகுருபரர் சுவாமிகள் பள்ளிக்கு நாளை (பிப்., 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி