தக்காளி விலை திடீர் வீழ்ச்சி.. வேதனையில் விவசாயிகள்

தென்காசி மாவட்டத்தில் சுரண்டை, ஆய்க்குடி, கம்பளி, அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.6 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் சாகுபடி செலவைக்கூட ஈட்ட முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, ஆள் கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகமாக உள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் பலர் பயிர்களை பராமரிக்காமல் விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி