தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கான சுங்கக் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு, நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில் பெரும்பான்மையான சாவடிகளில் கடந்த ஏப்.1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 26 சாவடிகளில் தற்போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.