தமிழ்நாட்டில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் இன்று (மே 23) நள்ளிரவு முதல் கட்டணம் ரூ.25 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 66 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒன்றரை மாதத்திற்குள் மீண்டும் ஒரு கட்டண உயர்வு என்பது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.