மதுரை மண்டலத்தில் இயக்கப்படும் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில், 1,108 பேருந்துகள் கப்பலூர் சுங்கச்சாவடியைக் கடக்கின்றன. இங்கு ஒருமுறை கட்டணம் இன்று முதல் ரூ.175-லிருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு பேருந்தின் ரூ.8,500 வருமானத்தில் ரூ.1,200 சுங்கக்கட்டணமாகவே செலவாகிறது. மதுரை மண்டலம் மாதம் செலுத்தும் ரூ.3 கோடி சுங்கக்கட்டணத்தில், கப்பலூருக்கு மட்டும் ரூ.1 கோடி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.