இந்தியாவில் தங்க விலை உயர்வால் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவது கனவாகி வரும் நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ தங்கத்தால் ஆன டாய்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மொரிசியோ கட்டெலன் என்ற கலைஞர் வடிவமைத்த இதன் ஏலம் நியூயார்க் நகரில் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய மதிப்பில் இதன் ஆரம்ப விலை ரூ.88 கோடி. அந்த தங்க டாய்லெட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.